தனிகட்சி மூலம் அரசியல் களம் வகித்த குமரி. டிக்சன் தற்பொழுது சினிமா துறையில் கால்பதித்திருக்கிறார். தற்பொழுது மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான “கபளீஹரம்” எனும் சினிமாவில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களுர், சென்னை, மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படத்தில் முருகவேல் எனும் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் மைம் கோபி, யோகிராம், மற்றும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.